திருச்சி மாவட்டம், குளித்தலையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், பேராவூரணியி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் திறம்பட தமது திறமையை வெளிக்காட்டி, ஒட்டுமொத்த முதல் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளனர். அதில் சேக் சாஜித், பூவிகா, சுந்தர் கணேஷ், அப்துல் ராபித், அப்துல் ராசித், கைலாஷ், அகிலன், சுனில் ராஜ் மற்றும் கவின் ராஜ் ஆகிய மாணவர்கள் முதலிடமும்,
விஷாலினி, முகமது ஆசிக் மற்றும் முகில் ஆகியோர் இரண்டாம் இடமும்,ரோகித் ஸ்ரீராம், விஷால், அப்துல் முபின்,நிகில் ஆர்க்சன் மற்றும்
அஜ்மல் தீன் ஆகியோர் மூன்றாம் இடமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். இதுகுறித்து அகடமியின் நிறுவனர் மருத உதயகுமார் கூறுகையில் " எளிய பின்புலத்திலிருந்து வந்த மாணவர்களின் இந்த வெற்றிக்கு தொடர் பயிற்சியும், இடைவிடாத முயற்சியுமே காரணம்" என்றார். மாணவர்களின் இந்த வெற்றிக்கு காரணமான அகாடமியின் நிறுவனர் மருத.உதயகுமார் மற்றும் சிலம்ப பயிற்சியாளர் ஸ்பர்ஜன் ராஜ் ஆகியோரை பெற்றோர்கள் மற்றும் அகாடமி நிர்வாகிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.