தஞ்சாவூர், நவ.22 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிளை நூலகத்தில் பொது நூலகத்துறை மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 56 ஆவது தேசிய நூலக வார விழா வாசகர் வட்டத் தலைவர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
வாசகர் வட்டம் சார்பில் அனைவரையும் ஜி.சுரேஷ் வரவேற்றார். விழாவில் ஓய்வு பெற்ற முதுகலை தமிழாசிரியர் செ.கருப்பையன், நூலக வளர்ச்சிக்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்கி நூலகத்தின் முதல் கொடையாளராக தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், பள்ளி மாணவர்கள் 100 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
விழாவில், செந்தில்குமார், ராமசாமி, திவ்யா, செல்வமணி தவசிகனி மற்றும் வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர் நூலகப் புரவலர்களாக இள. திகழ்வேந்தன், ஆர்.தமிழப்பன் இணைந்தனர். நிறைவாக நூலகர் கோ.நீலவேணி நன்றி கூறினார்.