தஞ்சாவூர், நவ.5 -
ராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பெற்ற, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் சுபேதார் பி.அருணாசலத்திற்கு, எம்.எஸ் விழா அரங்கில், ஞாயிற்றுக்கிழமை காலை,
முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கம் சார்பில்,
பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேராவூரணி முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கம், பொருளாளர் மணிமாறன் தலைமை வகித்தார். செயலர் பாலதண்டாயுதம் வரவேற்றார். ஞானசேகரன் வாழ்த்திப் பேசினார். தலைவர் நீலகண்ட சேகரன் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் வீரமங்கையர் சங்கம் மாநிலத் தலைவர் ஆலயம் திலகரத்னம், மாநில துணைத் தலைவர் பொய்யாமொழி, மாநில இணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில அமைப்பு செயலாளர்கள் சுப்புராஜ், வில்வலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பணிஓய்வு சுபேதார் பி.அருணாசலம் ஏற்புரையாற்றினார். நிறைவாக, சங்க இணைச் செயலாளர் திருஞானம் நன்றி கூறினார்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி