தஞ்சாவூர், நவ.17 - பேராவூரணியில் நடைபெற்ற லயன்ஸ் சங்க விழாவில், ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி விநாயகா திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை பேராவூரணி லயன்ஸ் சங்கம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், மாவட்ட ஆளுநர் ஆண்டு அலுவல் வருகை தின விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் கே.சிவநாதன் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அகமது கபீர் (குப்பாஷா) வரவேற்றார். பேராவூரணி சங்க செயலாளர் ஜி.ராஜா, அதிராம்பட்டினம் சங்க செயலாளர் எம்.ஹாஜா நசூர்தீன் செயலர் அறிக்கை வாசித்தனர்.
இந்நிகழ்ச்சியில், குருவிக்கரம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டில்கள் மெத்தைகள், முதியோர் இல்லத்திற்கு கொசுவலை, பேராவூரணி அரசு கிளை நூலகத்திற்கு வாட்டர் டேங்க் மற்றும் மின் மோட்டார், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஏழைப்பெண்ணுக்கு தையல் மெஷின், கொன்றைக்காடு அரசு பள்ளிக்கு வாட்டர் பியூரிஃபையர் என ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, மாவட்ட ஆளுநர் எம்.இமயவரம்பன் சிறப்புரையாற்றினார்.
இதில், மாவட்ட முதல் பெண்மணி ஹேமா இமயவரம்பன், இணையசேவை மாவட்டச் செயலர் தஞ்சாவூர் ஸ்டாலின் பீட்டர் பாபு, மாவட்ட அவை கூடுதல் செயலாளர் எஸ்.கே. ராமமூர்த்தி, மாவட்ட அவை இணைபொருளாளர் எம். கனகராஜ், மண்டலத் தலைவர் என்.டி.ராமஜெயம், வட்டாரத் தலைவர்கள் கே. குட்டியப்பன், எம்.அகமது, பொருளாளர்கள் பழ.பழனியப்பன் (பேராவூரணி), எம்.நியாஸ் அகமது (அதிராம்பட்டினம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி