பேராவூரணியின் புகழ்பெற்ற மருத்துவர் வி. சௌந்தர்ராஜனுக்கு சிறந்த மருத்துவர் விருது
சென்னையில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில மாநாட்டின் போது, பேராவூரணி பகுதியின் புகழ்பெற்ற சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் சௌந்தர்ராஜன், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோரிடமிருந்து சிறந்த மருத்துவதற்கான விருது பெற்றார். உடன் சங்க பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி ஆர் ரவீந்திரநாத் மற்றும் மருத்துவர் ஏ ஆர் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.