டெல்டா புத் தொழில் குழு, பேராவூரணி லயன்ஸ் கிளப் மற்றும் பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நாளை (26-11-2023 ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு மணி முதல் 5 மணி வரை பேராவூரணி டாக்டர் ஜே சி குமரப்பா பள்ளியில் நடைபெற இருக்கிறது இக்கருத்தரங்கில் அரசு திட்டங்கள், மானியங்கள், மகளிர் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஸ்டார்ட் அப் உலகம், ஏற்றுமதி இறக்குமதி உத்திகள் மற்றும் இணைய வணிகம் ஆகியவை குறித்து விரிவாக தகுந்த கருத்தாளர்களைக் கொண்டு விளக்கப்பட இருக்கிறது. கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புகிற அனைவரும் முன் பதிவிற்கு 98 410 316 5 5 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.