பேராவூரணி பகுதியில் பருவ மழையினால் வீடுகள் சேதமடைந்த பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்கல்
பேராவூரணி, நவ 22
பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில், பருவ மழையினால் வீடுகள் சேதமடைந்த பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில், நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு, பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தது. அந்த வகையில், பேராவூரணி பகுதியில் உள்ள கூரை வீடு, ஓட்டு வீடு என மொத்தம் 12 வீடுகள் மழையினால் சேதமடைந்தது.
பகுதி சேதம் அடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.4 ஆயிரத்து 100யும், முழுமையான சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதி சேதம் அடைந்த ஓட்டு வீடுகளுக்கு ரூ.5 ஆயிரத்து 200யும் ஆக மொத்தம் ரூ.58 ஆயிரத்து 900 ஐயும், பயனாளிகளுக்கு, எம்.எல்.ஏ அசோக்குமார் வழங்கினார்.
இதில் தாசில்தார் தெய்வானை, மண்டல துணை தாசில்தார் தர்மேந்திரா, தலைமை இடத்து துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல்மஜீத், ஒன்றியச் செயலாளர் அன்பழகன், நகரச் செயலாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.