தஞ்சாவூர், நவ.4 -
பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சனிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார். பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு கடைகளுக்கு கடைக்காரர்கள் உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் பேராவூரணியில் உள்ள பட்டாசு விற்பனை உரிமம் செய்ய விண்ணப்பித்திருந்த கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பட்டாசு கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடைக்காரர்களுக்கு உத்தரவு வழங்கினார். இந்த ஆய்வின் போது பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயதுரை, முருகேசன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் கமலநாதன், கிராம நிர்வாக அலுவலர் சிவா, கிராம உதவியாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி
செய்தியாளர்