குருவிக்கிரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நூலக வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் அறக்கட்டளை சார்பில் சான்றிதழும் பெரியார் அம்பேத்கர் நூலகம் சார்பில் எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய அண்டத்தின் கதை அறிவியல் நூலும் பரிசாக வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் வி. மனோகரன் நிகழ்வுக்கு தலைமை ஏற்று மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
மாணவர்களிடம் உரை நிகழ்த்திய பள்ளியின் ஆசிரியர் முனைவர் க. சற்குணம்,
"காலம் முழுவதும் கற்றலை தொடர வேண்டும். கற்றலே கற்பித்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது இது அறிவியலாளர் ஐன்ஸ்டினின் கூற்று. சிறுவயதிலேயே நூலகத்திற்குச் சென்று படிக்கும் பழக்கத்தை பழக்கி கொள்ளுங்கள்" என்றார்.
நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சுபாஸ்கரன், ஆசிரியர்கள் நீலகண்டன், கிருத்திகா, நிவேதா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.