பேராவூரணி, நவ 25
பேராவூரணி அருகே மருங்கப்பள்ளதில் கூரை வீடு தீப்பற்றி எரிந்து முழுவதும் சாம்பல்.
மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த நடராஜன்(65) அவரது மகன்கள் சரவணன், வீரமணி, ராஜலிங்கம், சக்திவேல் அனைவரும் விவசாய கூலி செய்து வருகின்றனர். நடராஜன் மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக கூரை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் உள்ள அனைவரும் விவசாய வேலைக்காக சென்றநிலையில், கூரை வீடு எதிர்பாரவிதமாக தீப்பற்றியது, வீட்டின் அருகே வேலை பார்த்துகொண்டிருந்த நடராஜனின் மகன் சரவணன் வீடு எரிந்ததை பார்த்து தண்ணீர் ஊத்தி அனைத்தார், இதனிடையே பேராவூரணி தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில், தீ அணைப்பு வீரர்களுடன் சென்று வீட்டின் அக்கம்பக்கம் தீ பரவாமல் அணைத்து விட்டனர். ஆனாலும் வீடு முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது. இதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரம், 5 பவுன் நகையும், வீட்டில் உள்ள வீட்டில் உள்ள அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அனைத்தும் தீயில் எரிந்து கருகியது, மின்கசிவினால் தீப்பற்றி இருக்கும் என கூறப்படுகிறது. தகவல் அறிந்து ஆர்.ஐ வெற்றிசெல்வி, வி.ஏ.ஓ பாரதி சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுக்கு உணவு, உடை வழங்கி, தங்கும் வசதி ஏற்பாடு செய்தனர். சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.