பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு இடையிலான கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்வில், யோகா பயிற்சியாளர் சௌ.ஜெயப்பிரகாஷ் மற்றும் கராத்தே பயிற்சியாளர் ஸ்பர்ஜன்ராஜ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில், அமிழ் ஸ்போர்ட்ஸ்
அகாடமி தலைவர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி, செயலாளர் ஆசிரியர் அ.காஜாமுகைதீன், பொருளாளர் இரா.ராம்குமார், சமூக ஆர்வலர் சித.திருவேங்கடம் ஊடகவியலாளர் மெய்ச்சுடர் வெங்கடேசன், பெற்றோர் சங்கத் தலைவர் அ.பேபி ராபிகா, பெற்றோர் சங்கச் செயலாளர் சு.நித்யா, பெற்றோர் சங்கப் பொருளாளர் ம.ஹேமலதா, நிர்வாக இயக்குனர் திருமதி உ.பிரவீனா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் திரளான பெற்றோரும், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மற்றும் முதல்வர் மருத.உதயகுமார் செய்திருந்தார்.