மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு.
தஞ்சாவூர், நவ.2 -
மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தீபிகா தலைமையிலான, 12 பேர் கொண்ட மாணவிகள் அணியினர், கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி, தஞ்சை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விளையாட்டு வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக, தனது சொந்தச் செலவில், 12 மாணவிகளுக்கும் விளையாட்டுக்கான சீருடைகள், கேன்வாஸ் ஷூ ஆகியவற்றை வழங்கி, மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியை ரெங்கேஸ்வரி, அன்னமேரி, கைப்பந்து தலைமை பயிற்சியாளர் பாரதிதாசன், நீலகண்டன், அருண் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.