தஞ்சாவூர், நவ.2 -
பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு விரைவில் புதிய கட்டடப் பணிகள் துவங்க உள்ள நிலையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனைக்கு கட்டடம் கட்டப்பட்டு 50 வருடங்களை கடந்த நிலையில், புதிய கட்டிடம் கட்ட வேண்டும். நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்ததையடுத்து, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு முதலமைச்சர் ரூபாய் 5.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை பொதுப்பணித்துறை (அரசு மருத்துவமனை கட்டடங்கள் கட்டுமான பிரிவு) செயற்பொறியாளர்
பி.நாகவேல், உதவி செயற்பொறியாளர் கேசவன் ஆகியோர், பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் முன்னிலையில் கட்டிடம் அமைய உள்ள இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது தரைத்தளம், முதல் மாடி, இரண்டாம் மாடி என நவீன வசதிகளுடன் கட்டிடங்கள் கட்டப்படும் என வரைபடங்களை காட்டி, சட்டப்பேரவை உறுப்பினரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த ஆய்வின்போது, அரசு தலைமை மருத்துவர் காமேஸ்வரி, மருத்துவர்கள் பாலகுமார், ரம்யா, செவிலியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்