தஞ்சாவூர், நவ.7 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசு வழங்கும் தீபாவளி பெருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தலைவர் எஸ்.ஏ.தெட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நடராஜன் வரவேற்றார். வர்த்தகர் கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், லயன்ஸ் முதல் துணை ஆளுநர் பொறியாளர் ஏ.சவரிராஜன் பேரூராட்சி தூய்மைப்
பணியாளர்களுக்கு சேலை, கைலி, துண்டு உள்ளிட்ட புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி, அவர்களின் சேவையை பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியில், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன், மாவட்டத் தலைவர்கள் இ.வீ.காந்தி, ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், சாசனத்தலைவர் நீலகண்டன், பொருளாளர் சிவநாதன், நிர்வாகிகள் கே.ஆர்.வி.நீலகண்டன், குமார், பெரியசாமி, சங்கர் ஜவான், குமார், சி.கா.கோவிந்தன், ராமச்சந்திரன், ராஜ்குமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக துப்புரவு மேற்பார்வையாளர் வீரமணி நன்றி கூறினார்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி