பேராவூரணி, டிச 4
ஒட்டங்காடு அருகே மேலஒட்டங்காடு ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் அருள் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் தீபா மற்றும் மருத்துவ குழுவினர்கள் முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் பூவலிங்கம், தவமணி, ஊராட்சி தலைவர் ராஜாக்கண்ணு கலந்து கொண்டனர்.