கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் எளியோருடன் கிறிஸ்மஸ் விழா

IT TEAM
0

 


பேராவூரணி, கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், கிறிஸ்துமஸ் திருவிழாவை சிறப்பிக்கும் வண்ணம், எளிய நிலையில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு, ரூபாய் 2500 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள்கள் அடங்கிய, பெட்டகம் வழங்கி , அவர்களின் சந்தோஷத்தில் பங்கு எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு, சாசன தலைவர் எம்.நீலகண்டன், மாவட்டதலைவர்  கே.இளங்கோ ஆகியோர் தலைமை வகித்தனர்.  சாசன பொருளாளர் S.மைதீன், வருங்கால தலைவர்  நா.ப. ரமேஷ்  ஆகியோர் முன்னிலை வைத்தனர். நிகழ்வில், ஆதனூர் மற்றும் புனல் வாசல் பகுதிகளைச் சார்ந்த எளிய கிறிஸ்தவர்கள் நான்கு நபர்கள் பயனாளியாக பங்கு பெற்று, ரூபாய் 2500 மதிப்புள்ள கிறிஸ்மஸ் வீட்டு உபயோக பெட்டகங்களை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்ச்சியை, வருங்கால பொறுப்பாளர்கள் லட்சுமி மெடிக்கல்ஸ் உரிமையாளர் B. பாலமுருகன், S.பெரியசாமி, ஆவி.ரவி மற்றும்  நிர்வாக அலுவலர் KR.D. குமரன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். 


முனைவர் வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top