தஞ்சாவூர், டிச.8 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, வீரியங்கோட்டை கிராமத்தில், பிள்ளையார் கோயில் குளக்கரையைச் சுற்றிலும், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் நூறு தென்னங்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். வீரியங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா அய்யப்பன் முன்னிலை வகித்தார். இதில், லயன்ஸ் சங்க சாசனத் தலைவர்
எம்.நீலகண்டன், முன்னாள் தலைவர்கள் வ.பாலசுப்பிரமணியன், இளங்கோ, வருங்கால தலைவர் ரமேஷ், சங்க நிர்வாகி மணிகண்டன், செயலாளர் நடராஜன் நிர்வாக அலுவலர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.