தமிழக காவல்துறை போலீஸ் டூட்டி மீட் 2023 அமர்வில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் எம். ராம்குமார், குற்ற விசாரணையில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை அளித்தல் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று, தமிழக டிஜியிடம், சில்வர் மெடலும் சான்றிதழும் பெற்றுள்ளார். பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் ராம்குமாரின் உழைப்பையும் பணியையும் பேராவூரணி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.