தஞ்சாவூர், டிச.8 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், ஒட்டங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியதெற்குக்காடு நடுநிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறையின் சார்பில், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சி வகுப்பு துவக்கி வைக்கப்பட்டது.
பயிற்சியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் தலைமை வகித்து துவக்கி வைத்து, மாணவர்களுக்கு தற்காப்பு கலையின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். வட்டார கல்வி அலுவலர்கள்
அ.அங்கயர்கண்ணி,
கா.கலா ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர்
அ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒட்டங்காடு ஒன்றியக் குழு உறுப்பினர் பாக்கியம் முத்துவேல், பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.வீரம்மாள், ஆசிரியர் பயிற்றுநர்
அ.ரா.சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெயந்தி, மரியாள், ரஞ்சிதா, வினோதா, சந்தியா ஆகியோர் செய்திருந்தனர். மாணவிகளுக்கான தற்காப்புக்கலை பயிற்சியை பயிற்சியாளர் ஜூடோ பாண்டியன் வழங்கினார்.