சென்னையில் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சாரபாக மண்டல ஒருங்கிணைப்பாளர் S.பாண்டியராஜன் ஏற்பாட்டில் சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு, சாசனத் தலைவர் M.நீலகண்டன்,மாவட்ட தலைவர் வ.பாலசுப்பிரமணியன், சாசன பொருளாளர் S.மைதீன்பிச்சை,முதல் துனைத் தலைவர் P.ரமேஷ்,இரண்டாம் துணைத் தலைவர் G.V.ராஜ்குமார்,நிருபர் கான்முகமது ஆகியோர் முன்னிலையில், சங்கத் தலைவர் S.A.தெட்சிணாமூர்த்தி தலைமையில் ரூபாய் 85,000 மதிப்புள்ள போர்வை -200, சேலை-200, கைலி-200 ஆகிய நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்சியில், முன்னால் பொருளாளர்கள் P.பழனிவேல், சபரி A.முத்துக்குமார்,சங்கர் ஜவான்,நிர்வாக அலுவலர் D.குமரன்,A.வெங்கடேசன், பெரியசாமி,ஆவி.ரவி,G.சசிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.