பேராவூரணி தாலுகா ஆதனூரில், கிறிஸ்மஸ் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம், டிசம்பர் 23 சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ரேக்ளா ரேஸ் மாவட்ட தலைவர் சிங்கவனம் ஜமீன்தார் ராஜா தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில் பெரிய மாடு நாலு பல் கன்று மற்றும் கரிச்சான் மாடு வண்டி பந்தயங்கள் நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ரேக்ளா நண்பர்கள் மற்றும் ஆதனூர் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.