பேராவூரணி, டிச 16
பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் விபத்தில்லா மின்சாரம் பயன்படுத்துவது எப்படி என்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் முர்த்தி வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன், பேராவூரணி துணை மின் நிலைய உதவி பொறியாளர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களிடம் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இதில், பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் (கட்டுமானம்) லட்சுமணன், வணிக ஆய்வாளர் ஆரோக்கியதாஸ், ஆசிரியர்கள் அரவிந்தன், வினோசிகா, ப்ரிதா, சரத்குமார், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்.