பேராவூரணி, டிச 4
பேராவூரணி அருகே புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயத்தில் திருவிழா நடந்தது.
புனல்வாசல் பங்கின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புனல்வாசல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நற்கருணை ஆராதனை இல்லத்தை தஞ்சை பரிபாலகர் தந்தை பேரருட்திரு சகாயராஜ் திறந்து வைத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயத்தின் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. கடந்த 9 நாட்களாக நடைபெற்று கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது. புனல்வாசல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புனல்வாசல் பங்கு தந்தை ஜான்சன்எட்வர்ட், உதவி தந்தை அற்புத சந்தியாகு அருட் சகோதர, சகோதரிகள் ஆலய நிர்வாகி வின்சென்ட்அருள்ராஜ் மற்றும் புனல்வாசல் பங்கு மக்கள் செய்திருந்தனர்.