தஞ்சாவூர், டிச.7 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி முதன்மைச் சாலை, கங்காணியார் கட்டடத்தில், மருத்துவமனையுடன் இணைந்த, 'ஸ்ரீநீவி சபரி மெடிக்கல்' திறப்பு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
திமுக தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளரும், ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ அலுவலருமான டாக்டர் வி.சௌந்தர்ராஜன் திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார்.
திமுக முன்னாள் நகரச் செயலாளர் தனம் கோ.நீலகண்டன், திமுக இலக்கிய அணி ஆனந்தராஜ், அயலக அணி ஷாஜகான், மருத்துவர் அணி ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினரும், நகர வர்த்தகர் கழக முன்னாள் பொருளாளருமான எஸ்.ஜகுபர்அலி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, உரிமையாளர் என்.ஆர்.செல்லையன்-செ.கலாவதி செய்திருந்தனர்.