பேராவூரணி, ஜன.1 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, திருச்சிற்றம்பலம் அருள்மிகு ஐயப்பன் சுவாமி ஆலயத்தில், அம்மா ஆன்மீகப் பேரவை மற்றும் துறவிக்காடு - திருச்சிற்றம்பலம் ஐயப்ப பக்தர்கள் குழுவினர்கள் இணைந்து, அருள் தரும் ஐயப்பனுக்கு, 108 நெய் தேங்காய் நீராஞ்சன தீபம் ஏற்றி, பேரிடர் இல்லா பிரபஞ்சம் அமைய வேண்டி வழிபாடு நடத்தினர். முதல் தீபத்தை குருசாமி என்.கே.ராமநாதன் ஏற்றி வைத்தார். ஆர்.கிருஷ்ணா, ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.