பேராவூரணியில் ஜன.12 இல், "நாளை நான் ஐஏஎஸ்" டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான வழிகாட்டும் முகாம்

IT TEAM
0

 



தஞ்சாவூர், ஜன.5 - 

சென்னை ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாதமியுடன், பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 'ழ' பவுண்டேசன் மற்றும் சென்னை எக்ஸ்மோல்டு பாலிமர்ஸ் நிறுவனம் இணைந்து, பெண்களுக்கான ஐ.ஏ.எஸ். மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான வழிகாட்டும் முகாம், வருகின்ற ஜன.12 ஆம் வெள்ளிக்கிழமை அன்று பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது.


இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வாணையம் நடத்துகின்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதிட விரும்பும் தேர்வர்களுக்காகவும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப் தேர்வுகளை எழுதிட விரும்பும் பெண் தேர்வர்களுக்காகவும், வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 'ழ' பவுண்டேசன் மற்றும் சென்னை எக்ஸ்மோல்டு பாலிமர்ஸ் ஏற்பாட்டின் பேரில், தமிழ்நாட்டில் அரசுப் பணித்தேர்வில் எண்ணற்ற வெற்றியாளர்களை உருவாக்கிய சென்னை ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாடமி மாபெரும் வழிகாட்டும் முகாமினை நடத்துகின்றது. இதுகுறித்து, ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குனர் சிபி.குமரன், வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் தாளாளர் டாக்டர் ஆ ஜீவகன் அய்யநாதன், சென்னை எக்ஸ்மோல்டு பாலிமர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top