பேராவூரணி குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் ஜே.ஸி.குமரப்பாவின் 132வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி கண்காட்சி

IT TEAM
0

 


பேராவூரணி, ஜன 5

பேராவூரணி குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஜே.ஸி.குமரப்பாவின் 132வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி கண்காட்சி நடந்தது.




தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து, ஜே.ஸி. குமரப்பாவின் 132 வது பிறந்த நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவினர். பள்ளி அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி வரவேற்றார். ஸ்டேட் வங்கி பேராவூரணி கிளையின் முதன்மை மேலாளர் ராமமூர்த்தி, பட்டுக்கோட்டை லாரல் சிபிஎஸ்இ பள்ளியின் செயலாளர் ஜீவிகா ஆகியோர் ஜே.ஸி.கே சிபிஎஸ்இ வித்யாலயா பள்ளியின் லெவல்அப் கல்வி கண்காட்சியை திறந்து வைத்தனர்.


நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு காண்போரின் கண்களுக்கு விருந்தளிப்பது மட்டுமின்றி கருத்து செறிவினை எளிதாக உணர்த்தும் அரிய வாய்ப்பை பயன்படுத்தினர். அதன்படி இப்பள்ளியின் அறிவியல் கண்காட்சி முற்றிலும் வேறுபட்டு இருந்தது. இளம் அறிவியல் துறை ஆய்வாளர்களை உருவாக்கும் விதமாக மாணவர்களின் நேரடி செய்முறை பயிற்சி, சுய கற்பனை வளம், உருவாக்கும் திறன், பிரச்னைகளை எதிர் கொள்ளுதல், ஆய்வின் முடிவுகளை வகைப்படுத்துதல், வரைபட மாதிரிகள் மூலம் விளக்குதல் என மாணவர்களின் பல நாள் உழைப்பின் பயனாக கண்காட்சி அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.


இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுபா நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top