பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், கவர்னரின் பசிப்பிணி போக்கும் திட்டத்தின் அடிப்படையில், பேராவூரணி அரசு மருத்துவமனையில் உள்ள உட்புற மற்றும் வெளிப்புற நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில், லயன்ஸ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன், சாசன தலைவர் நீலகண்டன், சங்க தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி, பாலு என்கிற பாலசுப்பிரமணியன், எஸ்.மைதீன் பிச்சை, தொழிலதிபர் தங்கராசு, ஞானசேகரன், சபரி முத்துக்குமார், நிர்வாக அலுவலர் குமரன் உள்ளிட்ட கோக்கனட் சிட்டி இன் ஸ்கொயர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.