தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள், மாநில அளவிலான யோகா போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றிகள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். அண்மையில், மன்னார்குடி யோகா சென்டரில் நடைபெற்ற, மூன்றாவது ஆண்டு மாநில அளவிலான யோகா போட்டிகளில், பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளனர். அதில் ஆறு மாணவர்கள் முதலிடத்தையும், ஐந்து மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், நான்கு மாணவர்கள் மூன்றாவது இடத்திலும், 21 மாணவர்கள் சிறப்பிடங்களையும் பெற்று, சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு, இன்று மாலை நடைபெற்றது. அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மருத உதயகுமார் தலைமை வகித்தார். அகாடமி தலைவர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, செயலாளர் ஆசிரியர் காஜாமைதீன், பொருளாளர் ஆர்.ராம்குமார், பெற்றோர் கழக தலைவர் நித்யா, பொருளாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், சிறப்பிடங்களை பெற்ற அகாடமி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயங்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மாணவர்களை பயிற்சி தந்து, தயார்படுத்திய யோகா பயிற்சியாளர் ஜெயபிரகாஷ்- க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. ஒத்துழைப்பு தந்த பெற்றோர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மாணவர்களை சிறப்பிடம் பெறச் செய்த, அகாடமி நிறுவனர் மருத.உதயகுமாருக்கு பெற்றோர்களும் மாணவர்களும் நன்றி தெரிவித்தனர்.