பேராவூரணி,
பேராவூரணி அருகே புளிச்சங்காடு கைகாட்டி தாய் புடோகான் ஸ்போர்ட்ஸ் கராத்தே பயிற்சி பள்ளி மற்றும் தாய் தமிழர் பாரம்பரிய சிலம்பம் சார்பில் மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
பள்ளியின் தலைமை பயிற்சியாளர் பாண்டியன் தலைமை வகித்து, மாணவர்களுக்கு தகுதி பட்டையும், சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில், கருப்புத் தகுதி பட்டை மற்றும் இதர தகுதி பட்டை மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடைபெற்றதில், 35 மாணவர்களில் 7 மாணவர்கள் கருப்புத் தகுதி பட்டைக்கு தகுதியானவர்களுக்கு சான்றிதழும், கருப்புத் தகுதி பட்டையும் வழங்கப்பட்டது.
இதில் திருப்பதி, கைகாட்டி வர்த்தக சங்க தலைவர் சிவசாமி, செயலர் வினோத்குமார், பொருளர் மணிகண்டன், டாக்டர் மகாலிங்கம், குமரேசன், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் அரவிந்த் வரவேற்றார். பேராசிரியர் கணேசன்மூர்த்தி நன்றி கூறினார்.