தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மனோகர் அண்மையில் முதுமையின் காரணமாக இயற்கை எய்தினார், அவர் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனமான ஸ்கூட்டியை, அவரது மகன் முத்துக்குமரன் இலவசமாக வழங்க முன்வந்தார். இந்நிலையில் பேராவூரணியைச் சேர்ந்த சமூக சேவகர் சபரி முத்துக்குமார், பல்வேறு முயற்சிகளை செய்து, இந்த இரு சக்கர வாகனமான ஸ்கூட்டியை இலவசமாக வழங்க தகுந்த பயனாளியை கண்டறிந்தார். அதனையடுத்து, பெருமகலூரைச் சார்ந்த பாலச்சந்தர் எனும் மாற்றுத்திறனாளிக்கு, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஸ்கூட்டியை வழங்கினார்கள். இந்நிகழ்வில், லயன் சபரி முத்துக்குமார், முத்து நீலகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர். தன் தந்தை பயன்படுத்தி வந்த மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஸ்கூட்டி, யாருக்கேனும் பயன்பட வேண்டும் என அதை வழங்க முன்வந்த முத்து நீலகண்டனையும், அது சரியான பயனாளிக்கு சென்று சேர பாலமாக இருந்த சமூக சேவகர் சபரி முத்துக்குமாரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர் .