இன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பேராவூரணி வடகிழக்கு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.. நிகழ்வில் பேராவூரணி பேரூராட்சி தலைவர் திருமதி சாந்தி சேகர், மூன்றாவது வார்டு கவுன்சிலர் ஹபீபா ஃபாருக், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், பள்ளி மேலாண்மை குழு தலைவி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மருத.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.. பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ராதேவி அனைவரையும் வரவேற்றார்.. உதவி ஆசிரியர் காஜா முகைதீன் நன்றி கூற, சமத்துவ பொங்கல் விழா நிகழ்வு இனிதே நிறைவுற்றது. மேலும் நிகழ்வில் பள்ளியின் உதவி ஆசிரியர்கள் ரேணுகா , தற்காலிக ஆசிரியர்கள் வனிதா, சினேகா, துர்கா தேவி, அங்கன்வாடி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...