தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுக்கா ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில், பள்ளியின் ஆண்டு விழா, பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியை செபஸ்டியன் சகாயமாலா பணி நிறைவு விழா, பள்ளியின் தலைமை ஆசிரியை அருள் சகோதரி ஜெஸ்ஸி லிட்டில் ரோஸின் இறைபணியின் வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்விற்கு, புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி ஏஞ்சல் மேரி தலைமை வகித்தார். விழாவில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என் அசோக்குமார், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பேராவூரணி காவல் ஆய்வாளர் காவேரி சங்கர், தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி நிர்வாகி அருட்தந்தை ஆரோன், திராவிட முன்னேற்ற கழக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், ஆதனூர் பங்குத்தந்தை கேஎம்.ஆரோக்கியசாமி துரை, பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கோவி. தாமரைச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வாழ்த்தி பேசினர். விழாவில், பேரூராட்சி உறுப்பினர்கள் ஆதனூர் காரல்மார்க்ஸ், மு.த. முகிலன் மற்றும் சுமதி நீலகண்டன், ஆதனூர் கிராம பொறுப்பாளர்கள் தலைவர் இருதயராஜ், செயலாளர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, பொருளாளர் எஸ். சக்கரியாஸ், தலைமையாசிரியர்கள் செல்வி, சரோஜா, உமா மகேஸ்வரி, அருட்சகோதரி ராபர்ட் கிளாரா, அருள் சகோதரி ராணி ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் நடனம், நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. . முன்னதாக பள்ளியின் கணித ஆசிரியை மெர்சி அருள் கலாரா வரவேற்புரையாற்ற, கணித ஆசிரியை ஏஞ்சலின் அருள்ஜோதி நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயபால், துணைத் தலைவர் ஏஞ்சல் நவநீதம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.