பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட, 4வது வார்டு ஆண்டவன் கோயில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள தெருவிளக்குகள், வெளிச்சம் பற்றாக்குறையாக இருப்பதை அறிந்து, அனைத்து விளக்குகளையும் எல்இடி விலக்குகளாக மாற்றிட பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் நடவடிக்கை எடுத்தார். அதன் அடிப்படையில், வார்டு கவுன்சிலர் த.முருகேசன் முன்னிலையில், பேரூராட்சியின் பணியாளர்கள் மைதானத்தில் உள்ள தெருவிளக்குகளை, புதிய 50 வாட்ஸ் எல்இடி மின் விளக்குகளாக மாற்றி அமைத்தனர். தற்போது மைதானம் முழுவதும் பிரகாசமாக இருப்பதை காண முடிகிறது. பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகரின் இந்த நடவடிக்கையை பொதுமக்களும், மைதானத்தை பயன்படுத்துவோரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.