பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சமத்துவ பொங்கல் விழா

IT TEAM
0

 


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு, அகாடமியின் தலைவர், முனைவர் வேத கரம்சந்த் காந்தி தலைமை வகித்தார். அமிழ் பவுண்டேஷன் மற்றும் அமிழ் ஸ்போர்ட் அகாடமி நிறுவனர் மருத.உதயகுமார், அகாடமியின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். விழாவிற்கு, அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர் ஆசிரியர் காஜாமுகைதீன், நிர்வாக இயக்குனர் பிரவீனா உதயகுமார், கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சியாளர் ஸ்பர்ஜன்ராஜ், யோகா பயிற்சியாளர் ஜெயபிரகாஷ், அமிழ் பவுண்டேஷன் செயலாளர் விவேக் ரோசாரியா, அமிழ் பவுண்டேஷன் துணைத் தலைவர் முகமது நசீர், அமிழ் பவுண்டேஷன் துணைச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி கவுன்சிலர் ஹபிபா, ஆதனூர் புனித அன்னாள் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி ராபர்ட் கிளாரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, வாழ்த்தி பேசினர். முன்னதாக, பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர் ஹபீபா ஆகியோர் பொங்கல் மண்பானையை வைத்து, அடுப்பினை தீ மூட்டி பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பெற்றோர்களுக்கு லக்கி கார்னர், கோலப்போட்டி, பானை உடைத்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிப்பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பல்வேறு இயக்கங்களின் அமைப்பினர், பெற்றோர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.  முன்னதாக அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பெற்றோர் சங்க செயலாளர் நித்யா வரவேற்புரையாற்ற, பொருளாளர் ஹேமலதா நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top