பேராவூரணி, ஜன 28
பேராவூரணியில் திமுக சுற்றுசூழல் அணி மற்றும் ஸ்ரீபிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள் சார்பில் நடத்திய மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடந்தது.
பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாத்துரை தலைமை வகித்தார். பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் முன்னிலை வகித்தார். ஸ்ரீபிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். ரேக்ளா பந்தயத்தை சுற்றுசுழுல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரியமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, நடு குதிரை, புதுபூட்டு குதிரை என 5 பிரிவுகளில் இந்த பந்தயம் நடத்தப்பட்டது. மாடு பந்தயத்தில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டன. குதிரை பந்தயத்தில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டன. 8,7,6 மைல் தூரம் போட்டிகள் நடந்தன. போட்டியில் பங்கேற்ற மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் எல்கையை நோக்கிச் சீறிப் பாய்ந்தன. பந்தய ரசிகர்கள் கண்டு களித்தனர். இதில் மொத்த பரிசாக ரூபாய் 3 லட்சத்து 77 ஆயிரம் வழங்கப்பட்டது. பேராவூரணி போலீசார்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.