தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக அரசாணை 243 ஐ ரத்து செய்து பழைய நடைமுறைப்படி ஒன்றிய அளவிலேயே ஆசிரியர்களின் முன்னுரிமைப்பட்டியல் தயாரித்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பேராவூரணி வட்டார கல்வி அலுவலகம் முன்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் லட்சுமணசாமி அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன், மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் ராகவன்துரை, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள். இறுதியாக, வட்டார பொருளாளர் செல்லதுரை நன்றி கூறினார். இதில் திரளான ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.