பேராவூரணியில், ஜேசிஐ குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு பேராவூரணி ஜேசிஐ சென்ட்ரல் தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். செயலாளர் விமல் மற்றும் பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜேசிஐ குறித்த விழிப்புணர்வு பயிற்சியை முனைவர் சத்திய.ஜெகதீசன் வழங்கினார். ஜேசிஐ அல்லாத 15க்கு மேற்பட்டோருக்கு, ஜேசிஐ குறித்த விளக்கங்களும், அதன் உறுப்பினர்களுக்கான பயன்பாடுகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.