பேராவூரணி, பிப் 9
பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடற்கரை காவல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமை வகித்து பேசினார். கடற்கரை காவல் நிலையங்களின் பல்வேறு பணிகள் குறித்த விவரங்கள், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கடற்கரை காவல் நிலையங்களின் செயல்பாடுகள், உபகரணங்கள் மற்றும் பல்வேறு தகவல்களை மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இதில் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமை காவலர் கோபால், காவலர்கள், ஆசிரியர்கள், புதுப்பட்டினம் அபு மெட்ரிக் பள்ளி, சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.