பேராவூரணி, பிப் 8
பேராவூரணி அருகே சூரியநாராயணபுரம் பகுதியில் ட்ரோன் மூலம் பிபிஎஃப்எம் தெளிக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ராணி தலைமையில், சூரியநாராயணபுரம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நெற்பயிரில் சுமார் 25ஏக்கர் பரப்பளவில் பிபிஎஃப்எம் என்று அழைக்கக்கூடிய திரவ வடிவிலான பாக்டீரியா ட்ரோன் மூலம் தெளிப்பு செய்யப்பட்டது. இப்பகுதியில் சம்பா நெல் பயிர் இன்னும் 15 தினங்களில் அறுவடை ஆகக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதற்கு முன்னதாக கடைசியா ஒரு தண்ணீர் கிடைக்கப்பெறாத காரணத்தால் வறட்சியினை தாங்குவதற்கு ஏதுவாக பிபிஎஃப்எம் தெளிப்பு ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது. ட்ரோன் மூலம் தெளிப்பு செய்து வழங்கியதன் மூலம் 16 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
இதில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி, உதவி தொழிலநுட்ப மேலாளர்கள் நெடுஞ்செழியன், சத்யா, வேளாண்மை உதவி அலுவலர் கவிதா, விவசாயிகள் கலந்து கொண்டனர்.