பேராவூரணியில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், சபரி பிளக்ஸ் அண்ட் பிரிண்டர்ஸ் மற்றும் நேதாஜி மருதையர் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய இதயம் மற்றும் பொது மருத்துவத்திற்கான இலவச மருத்துவ முகாம், டாக்டர் ஜே.ஜி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் இதய நோய் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் இசிஜி, எக்கோ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.