ஆதனூரில் சிறுவர்களுக்கான மாரத்தான் பேராவூரணி வட்டம் ஆதனூர் கிராமத்தில் வருகிற சனிக்கிழமை காலை, உடல் ஆரோக்கியம் விளையாட்டு மற்றும் கல்வி விழிப்புணர்வை வலியுறுத்தி, ஆதனூர் இளைஞர்கள் கிராமத்தார்கள் மற்றும் மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நடத்துகிற, சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் எஸ்.அருள்சூசை தலைமை வகிக்கிறார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், பேராவூரணி வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நிகழ்ச்சிக்கு பல்வேறு முக்கியஸ்தர்களும், முன்னாள் விளையாட்டு வீரர்களும், அரசு பணியாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர். பட்டுக்கோட்டை சார் நில அளவை ஆய்வாளர் எஃப்.ஜான் கென்னடி வரவேற்க, சந்தியாக நன்றி கூற இருக்கிறார். நிகழ்ச்சியில், 14 வயதிற்குட்பட்டோர் ஆண் பெண் தனியாகவும், 19 வயதிற்கு உட்பட்டோர் ஆண் பெண் தனியாகவும் மாரத்தான் நடத்த இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செ. ஆனந்தராஜ் மற்றும் அருண் ஆரஞ் காவல்துறை ஆகியோர் தெரிவித்துள்ளனர். முன்பதிவிற்கும் சந்தேகங்களுக்கும் 8489300065 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் அருண் ஆரஞ் தெரிவித்துள்ளார்.
ஆதனூரில் சிறுவர்களுக்கான மாரத்தான்.
பிப்ரவரி 16, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க