பேராவூரணி திருவள்ளுவர் கல்விக்கழகம் மற்றும் நகர வர்த்தக கழகம் இணைந்து நடத்தி வரும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிக்கூடத்தின், மூன்றாவது ஆண்டு துவக்க விழா, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பழனிவேல் தலைமை வகித்தார். நிகழ்வுக்கு, மெய்ச்சுடர் வெங்கடேசன், பேராசிரியர் சண்முகப்பிரியா, பேராசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி வட்ட சார ஆய்வாளர் சந்தோஷ், பயிற்சி கூடத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். பேராவூரணி நகர வர்த்தக கழக தலைவர் ஆர்பி.ராஜேந்திரன், செயலாளர் திருப்பதி, பொருளாளர் எல்ஏஎம்.சாதிக் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், பேராவூரணி அரசு கலைக்கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி ஆகியோர் வழிகாட்டுரை வழங்கினர். வருவாய்த்துறை அதிகாரிகள் சிவமணி, சிவனேசன், காளிதாஸ் அருண், விக்னேஷ், சக்திவேல் மற்றும் ஆசிரியர் சிங்காரவேல் உள்ளிட்ட பயிற்றுநர் குழு, சமூக ஆர்வலர்கள் சபரி குமார், அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மருத உதயகுமார், ஆசிரியர் காஜாமுகைதீன், மற்றும் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், போட்டித்தேர்வு ஆர்வலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.