தஞ்சாவூர், பிப்.5 -
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பேராவூரணி வர்த்தகர் கழக அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.
தேர்தல் ஆணையராக ஜூலியஸ், தேர்தல் துணை ஆணையராக தர்மராஜன் செயல்பட்டனர். அனைத்து பொறுப்புகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதில், மாவட்டத் தலைவராக க.அருள், மாவட்டச் செயலாளராக
செ.ராகவன்துரை,
மாவட்டப் பொருளாளராக
ந.நாகராஜன்,
மாவட்டத் துணை தலைவர்களாக
மா.நாகராஜன்
பா.ராஜேந்திரன்,
சீ.சூரியபிரபா,
துணைச் செயலாளர்களாக செ.அன்பரசன்,
கு.சௌந்தரராஜன், சு.விஜயலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக
ஆ.பாஸ்கர், கு.சகிலா மற்றும் மகளிர் செயற்குழுவில் 5 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்வில், சிறப்பு விருந்தினராக அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழு உறுப்பினர் மோகன்தாஸ் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.
முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.குழந்தைசாமி,
மாநிலத் துணைத் தலைவர் க.கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் துரைப்பாண்டி, அனைத்து வட்டாரத்தின் முன்னாள், இந்நாள் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.