சென்னையில், விஜய் மீடியா அசோசியேட் நடத்திய பன்னாட்டு கல்வியாளர்கள் மாநாட்டில், பேராவூரணி நேதாஜி மருதையர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்திக்கு, சிறந்த கல்வி சேவகர் விருது வழங்கப்பட்டது. இவ்விருவினை, பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஷ் வழங்கினார். மிகவும் பின்தங்கிய, பொருளாதார தடை உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி வாய்ப்பை வழங்கியமைக்காகவும், உயர் கல்வியில் மாணவர்களை சொந்த செலவில் தொடர்ந்து படிக்க வைப்பதை பாராட்டியும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த கல்வி சேவகர் விருது பெற்ற ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தியை, முக்கியஸ்தர்களும், நண்பர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.