பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், ஜெயகொண்டம் சோழன் சிட்டி மற்றும் சென்னை முக்தி பவுண்டேசன் இணைந்து ஜெயங்கொண்டதில் நடைபெற்ற நிகழ்வில், பயனாளிகள் நால்வருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு,
மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர். மணிவண்ணன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாண்டியாஜன் ஏற்பாட்டில், சங்க செயலாளர் ஜிவி.நடராஜன், சங்க பிஆர்ஓ பிரதீஸ்.ஜி ஆகியோரின் ஒத்துழைப்பொடு இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்
பட்டிருந்தது. நிகழ்வில் , சாசன தலைவர் எம்.நீலகண்டன்,மாவட்ட தலைவர் கே.இளங்கோ,இரண்டாம் துணை தலைவர் ஜி.வி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.