பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, உதவித் தலைமை ஆசிரியர் சோழபாண்டியன் வரவேற்புரையாற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சோழபாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக வாட்ஸ்.சுந்தர்ராஜன், நேதாஜி மருதையர் அறக்கட்டளை நிறுவனர் தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய சமூக சேவகர் தட்சிணாமூர்த்தி, " நானும் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமை அடைகிறேன். சென்ற ஆண்டு இதே பள்ளியில் படித்த 12 மாணவர்களின் உயர்கல்விக்கு வழி காட்டியதை போல, இந்த ஆண்டு இந்த பள்ளியின் மாற்றுத்திறனாளி மாணவனின் உயர் கல்வியை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்றார். விழாவில், பாட்டு போட்டி, பேச்சு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவினை, பட்டதாரி ஆசிரியர் அடைக்கல மணி தொகுத்து வழங்கினார். விழாவின் இறுதியில், அனைத்து மாணவர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை சிறப்பு விருந்தினர் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார். இறுதியாக, உதவி தலைமை ஆசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.