பேராவூரணி, பிப் 18
பேராவூரணி குமரப்பா பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு 25, 50, 100, 200, 400, 800 மீட்டர் தூரம் உள்ள ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் பல போட்டிகள் நடத்தப்பட்டன, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதங்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.
இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், பள்ளி முதல்வர் சர்மிளா, உடற்கல்வி ஆசிரியர்கள் முரளிதரன், பவன்குமார், ரமேஷ், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.