பேராவூரணி தாலுக்கா ஆதனூர் கிராமத்தில், பல தலைமுறையாக காவல் தெய்வமாக இருந்து வரும் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா சிறப்புடன் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ஆதனூர் பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கியசாமி துரை அடிகளார் திருவிழா திருப்பலி நிகழ்த்தினார். தொடர்ந்து தயாரிக்கப்பட்ட உணவு புனிதம் செய்யப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், அருட்சகோதரிகள், ஆர்சி சபை நிர்வாகிகள் இருதயராஜ், அந்தோணிசாமி ஆசிரியர், அருள்செல்வம், மரிய சவரிநாதன், சக்கரியாஸ், சுனில், பாலசிங்கம், மில்டன், சின்னப்புராஜா, கோவில் பிள்ளை ராஜசிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆர்சி சபை செயலாளர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, பொருளாளர் அன்பானந்தம் ஆகியோர் செய்து இருந்தனர்.