தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா ஆதனூர் கிராமத்தைச் சார்ந்த எஸ்.எசேக்கியா தற்போது வடநாடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் 2003ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து, பல்வேறு காவல் பணி அனுபவங்களை பெற்று, 20 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். அவர், இந்த ஆண்டுக்கான முதலமைச்சரின் காவல் பதக்கத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார். இதனை எடுத்து அவரது சொந்த ஊரான அதன் ஊரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, அவரை வாழ்த்தும் விழா நடத்தினர். விழாவிற்கு, ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த மின்சார வாரிய பணியாளர் லெனின் லூதர் தலைமை வகித்தார். விழாவிற்கு, லெனின் மெமோரியல் நண்பர்கள் கிளப் மற்றும் கேஏஎல் கேபிள் விஷன் நண்பர்கள் பிரடரிக், லிபின்சன் மற்றும் நவீன் ஜோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு, கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் சமூக ஆர்வலர் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர் குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில், தலைமை காவலர் எசேக்கியாவுக்கு மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், கிராம பொறுப்பாளர்கள் அந்தோணி செல்வராஜ் மற்றும் அன்பானந்தம் ரயில்வே ஓய்வு, ஆதனூர் கவுன்சிலர் காரல்மார்க்ஸ், பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மருத.உதயகுமார், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை தாமரைச்செல்வன், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் இருதயராஜ், ஜான் போஸ்கோ, அருள்ராஜ் ஐஓபி, ரூபன், கோவை ஞானராஜ், லெனின் மெமோரியல் கிளப் நண்பர்கள் எட்வின், அமல்ராஜ், பாலசிங்கம், ஆமோஸ், அருள் யோசுவா, மணிகண்டன் மற்றும் சுனில் பிரதர்ஸ், வனத்துறை அந்தோணிசாமி, ஏவிஎம் பிரிண்டர்ஸ் அலெக்ஸாண்டர், ஆதனூர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக காலை தொடங்கி மாலை வரை சிறுவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு மாலையில் பரிசு வழங்கும் விழாவும் நடைபெற்றது. இறுதியாக தலைமை காவலர் எஸ்.எசேக்கியா ஏற்புரை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதனூர் லெனின் மெமோரியல் கிளப் நண்பர்கள், கேஏஎல் கேபிள் விஷன் நண்பர்கள் மற்றும் சுனில் பிரதர்ஸ் செய்திருந்தனர். இறுதியாக பால் ஜோசப் நன்றி கூறினார்.